டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மதுபான உற்பத்தி ஆலை உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக

தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையில் நான்கு இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சிவா டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான உற்பத்தி ஆலையில், இன்று அதிகாலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல, பொள்ளாச்சி, நவக்கரை, பீளமேடு உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் ஆலை வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் மற்றும் பிற பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...