சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பண நோட்டுகளை மட்டும் திருடிச் சென்று, சில்லறை நாணயங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை அங்கேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில், மர்ம நபர்கள் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டில் ஈடுபட்டவர்கள், உண்டியலை கோவில் வளாகத்திலிருந்து அருகிலுள்ள காலியிடத்திற்கு எடுத்துச் சென்று உடைத்த பின்னர், அதிலிருந்த பண நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்களையும், கோவிலில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களையும் திருடாமல் அங்கேயே விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கொரோனா காலகட்டத்திலும் இதே கோவிலில் இதுபோன்ற உண்டியல் திருட்டு நடைபெற்றிருந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்வதுடன், கோவில்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...