மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை தள்ளியதில் அவர் உயிரிழந்த வழக்கில், குணசேகரன் (29) என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், சக பெயிண்டிங் தொழிலாளியை தாக்கி கொலை செய்ததாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் மள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (29) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாஸ்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (43) ஆகியோர் பெயிண்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இருவரும் கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த கட்டிடப் பெயிண்டிங் பணிக்காக ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி மூலம் அழைத்து வரப்பட்டு, பணிபுரிந்த அதே கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி இரவு வேலை முடிந்த பின்னர் இருவரும் மது அருந்தியபோது, பணப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த பி.வி.சி. குழாயால் வெங்கடேஷ் குணசேகரனை தாக்கியதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த குணசேகரன் வெங்கடேஷை பலமாகத் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து குணசேகரன் அங்கிருந்து விலகிச் சென்று கட்டிடத்தின் மேல்தள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அவர்களுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் இருந்த வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ஒப்பந்ததாரர் முத்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் BNS 103, 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...