தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பள்ளிக் கட்டணங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக கோவை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.

கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர்கள் அதிக நம்பிக்கையுடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாக கூறினார்.

“அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வலுப்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கேற்ப கணினி அறிவியல் பயிற்றுநர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து, தேவையான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.

பள்ளி வளாகங்கள், குறிப்பாக கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு தற்போது வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லாததால் சில இடங்களில் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு நிதியை உயர்த்த முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரண்டு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், தற்போது இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது,” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...