கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை: கோவை நீதிமன்றம் அருகிலுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின்போது, முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.61.90 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அமைச்சரிடம் வழங்கினார்.



தொடர்ந்து, 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.



நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...