கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் பணியை துவக்கியும், கிழக்கு மண்டலத்தில் ₹2.36 கோடியில் அமைக்கப்பட்ட 4.26 ஏக்கர் பரப்பளவு மூங்கில் பூங்காவை திறந்து வைத்தார். மொத்தம் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான இந்த வளர்ச்சி திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று (01.08.2026) அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்தும், பார்வையிட்டார்.



மத்திய மண்டலத்தின் வார்டு எண் 32-க்குட்பட்ட சங்கனூர், தண்டல்ராமன் வீதி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ₹29.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுதல் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். பணிகளை விரைவாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண் 55-க்குட்பட்ட சிங்காநல்லூர், SIHS காலனி, காவேரி நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ₹2.36 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.



மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar IAS, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.S.ஸ்ரீகிரி பிரசாத் ஆகியோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

திறக்கப்பட்ட மூங்கில் பூங்காவில் நடைபாதை, யோகா பயிற்சி வசதி, திறந்தவெளி அரங்கம், குடிநீர் விநியோகப் பகுதி, வெளிப்புற உடற்பயிற்சி வசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் வே.சம்பத்குமார் பூங்காவை பார்வையிட்டு மரக்கன்று நடவு செய்தார்.

கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், துணை மாநகரப் பொறியாளர் எழில், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், இளங்கோவன், மாமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், தர்மராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், ராஜராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகநாதன், நவீன்குமார், ஜெரால்டு சத்ய புனிதன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த வளர்ச்சி திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெறுமாறு அமைச்சர் வே.சம்பத்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...