கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வலியுறுத்தியும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நடைப்பயணம் இன்று முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

கோவை: 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் வியாழக்கிழமை கோவையில் தொடங்கியது.

கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலப் பொருளாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆறுமுகம் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் மக்கள் பல்வேறு பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், மத்திய அரசு அவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்துவதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கத்தை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.



அதன்படி, கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கியுள்ள இந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார நடைப்பயணம் ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நடைப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நலன் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்ட உள்ளதாக எம். ஆறுமுகம் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...