கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாக தகவல்.

கோவை: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆரமுதன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த், தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவா ரோஹித், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வந்த அமுதன் உள்ளிட்ட 9 மாணவர்கள் கடந்த 9-ம் தேதி முகமூடி அணிந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று செல்போன்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போன் திருட்டு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்ட மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் தொடர்பாக அமுதன் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருவதாகவும், இந்தக் கொலை போதைப்பொருள் தொடர்பானது அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் சுமார் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...