கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்காக மண் கடத்தி வந்ததாக 4 லாரிகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, கோவை வீரபாண்டி பிரிவில் உள்ள கட்டிடப் பணிகளுக்காக மண் கடத்தி வந்ததாகக் கூறப்படும் 4 லாரிகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடப் பணிகளுக்காக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அங்கு மண் கொட்டிக் கொண்டிருந்த 4 லாரிகளின் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மண் அள்ளும் அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மண் கொண்டு வந்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



இதையடுத்து 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மண் கடத்தலில் தொடர்புடையவர்கள் மற்றும் அனுமதி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...