“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்களையும் அவதூறாகவும், கொச்சையாகவும் பேசி வருவதாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேரறிவாளன், த.வெ.க நிர்வாகி மைக்கேல் தொடர்ந்து தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் குடும்பப் பெண்களையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

திரைப்பட நடிகைகள் குறித்து தவறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், பிற பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகக் கூறப்படும் த.வெ.க நிர்வாகி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ‘சிங்கப் பெண்கள்’ படையை தொடங்கியதாக கூறும் த.வெ.க, தங்களது கட்சி நிர்வாகி பெண்கள் குறித்து அவதூறாகப் கூறப்படும் புகார் குறித்து கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த மைக்கேல் திட்டமிட்டு மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மைக்கேல் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...