சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் நியாய விலைக் கடை ஆய்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று மேற்கொண்டார்.



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பீளமேடு கோபால் நகர் பகுதியில் செயல்படும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று காலை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கிறதா என்பதை நேரடியாக மக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நியாய விலைக் கடை ஊழியர்களும் உடனிருந்தனர்.



தொடர்ந்து பீளமேடு பேரநாயுடு வீதியில் தினசரி குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணிகள் குறித்து விசாரித்த அவர், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தனித்தனியாகப் பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.



அதேபோல் பீளமேடு பெரியார் வீதியில் சாலையோர குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இந்தப் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளை தினசரி முழுமையாக அகற்றி தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு வலியுறுத்தினார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...