கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த தேங்காய்கள் சாலையில் சிதறிய நிலையில், ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கோவை: கோவை உக்கடம் பகுதியில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு தேங்காய்கள் ஏற்றப்பட்ட ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தது. கரும்புக்கடை அருகே சென்றபோது, லாரியின் டயர் ஒன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.



இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட தேங்காய்கள் சாலையில் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி கவிழ்ந்தபோது அருகில் பிற வாகனங்கள் எதுவும் நெருக்கமாக இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள், சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலையை சீரமைத்தனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...