தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குறித்து பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தவெக அரசின் கவனம் திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதிலேயே இருப்பதாக குற்றம்சாட்டினார்.


கோவை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த பதிலுரை அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உருவ கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியதாகக் கூறி திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சரின் சட்டப்பேரவைப் பேச்சு தமிழக வெற்றிக் கழகத்தின் தோல்விகளை மறைக்கும் முயற்சியாக இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அவரது பதிலுரை அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்றார்.

திமுகவை விமர்சிப்பதற்காகவே முதலமைச்சர் தனது பதிலுரையை பயன்படுத்தியதாகக் கூறிய கிருஷ்ணசாமி, திமுகவுக்கு பதிலளிப்பது முதலமைச்சரின் கடமை அல்ல என்றும், தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே அவரது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டுமே ஊழலில் ஈடுபட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல என்றும் அவர் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், ஊழல் தொடர்பாக திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தொடர்ந்து எச்சரித்து வருவது வெறும் “பூச்சாண்டி காட்டுவது” போன்றது என்றும் கிருஷ்ணசாமி கூறினார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் மக்கள் பிரச்சினைகள் மற்றும் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட விவகாரங்களை தற்போது பேசுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டங்களில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையில், திமுக மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நடுநிலையான அணுகுமுறை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதல்வர் விஜயின் பதிலுரை இன்னும் சினிமா பாணியில் தான் உள்ளதே தவிர, அதில் மரபு இல்லை என்றும் கிருஷ்ணசாமி விமர்சித்தார்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்பு அளிக்காமல் அவையில் இருந்து வெளியேற்றியது ஏற்புடையதல்ல என்றார். முதலமைச்சரின் செயல்பாடுகள் பேரவை மரபுகளுக்கு ஏற்ப இருப்பதாகத் தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தோல்விகளை மறைப்பதற்காகவே திமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகக் கூறிய கிருஷ்ணசாமி, அரசியல் தோல்விகளை மறைப்பதற்காக மக்களின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பக கூடாது என்றார்.

முதலமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இன்னும் இடைவெளி இருப்பதாகவும், சில அதிகாரிகள் அவருக்கு தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...