கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் கழிவுகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS தலைமையில் செப்டம்பர் 10, 2026 அன்று நடைபெற்றது.




இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தாவது, கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி வீடுகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கழிவுகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.





தினசரி 100 கிலோவிற்கு மேல் கழிவுகளை உருவாக்குபவர்கள், 40,000 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துபவர்கள் மற்றும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அனைவரும் மொத்த குப்பை உற்பத்தியாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் தங்கள் நிறுவனத்திலிருந்து கழிவுகளை மக்கும் குப்பையாக தனியாக பிரித்து தங்கள் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும்.




காய்கறி கழிவுகள், தேங்காய் மூடி, இறைச்சி கழிவுகள், மீதமான உணவுகள் உள்ளிட்ட ஈரக்கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கவர்கள் உள்ளிட்ட உலர்கழிவுகள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட சுகாதார கழிவுகள் மற்றும் வீட்டில் உற்பத்தியாகும் பேட்டரி, பல்பு உள்ளிட்ட சிறப்பு கழிவுகளை மாநகராட்சியிலோ அல்லது மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலோ வழங்கிட வேண்டும்.




மேலும், மாநகராட்சி பகுதியில் செயல்படும் மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் புதிய திடக்கழிவு மேலாண்மை விதி 2026யினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மாநகராட்சியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் உலர் கழிவு சேகரிக்கும் மையங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.




மொத்த கழிவுகள் உற்பத்தியாளர்களிடமிருந்து திடக்கழிவுகளை பெற்று உரிய மேலாண்மை மேற்கொள்ள தகுதி வாய்ந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்கள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நிறுவனத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கு தேவையான வசதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.




மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் அனைவரும் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மாசுகட்டுப்பாட்டு வாரிய வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்ற மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் தவறாமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.




தங்களது வளாகத்தில் செயல்படுத்த போதிய வசதிகள் இல்லை எனில் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களிடம் மட்டுமே வழங்கிட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்கள்.




இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...