மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரையில் பிடிபட்டார். விவசாயிகளுக்கான மானிய விலை உரத்தை தொடர்ந்து கடத்தியதால், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Coimbatore: மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் பாரத் யூரியா உரத்தை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் Roobesh Kumar Meena, IPS உத்திரவின் பேரிலும், கனம் காவல் கண்காணிப்பாளர் R. சீனிவாச பெருமாள் அவர்களது அறிவுரைப்படியும், கோவை சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் S. மரியமுத்து மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கடந்த 28.08.2026 காலை 06.30 மணிக்கு கோவை மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில், வேளாண்மை அலுவலர் நாக சுப்பிரமணியம் தனது குழுவினருடன் கோவை-பாலக்காடு சாலையில் RTO சோதனைச்சாவடி அருகே வாகனத்தணிக்கை மேற்கொண்டனர். TN 32 AH 9612 என்ற பதிவு எண்ணுள்ள Ashok Leyland Tarrus லாரியில் 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர்.


இந்த உர மூட்டைகள் கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் அவரது தம்பி செந்தில்குமார் ஆகியோர் நடத்தும் பாரத் யூரியா உர கடையிலிருந்து எடுக்கப்பட்டவை. விருத்தாசலம் மெயின் ரோடு டோல்கேட் பகுதியில் வைத்து லாரியில் ஏற்றப்பட்டு, கேரள மாநிலம் எர்ணாகுளம், அல்லப்பாராவை சேர்ந்த முகமது பாசில் என்பவரின் உதவியுடன் Perumbavur, Plywodd Manufactures Consortium Pvt Ltd, Sidco Industrial Park, Angamali, Kerala நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கடத்தப்பட்டது.


இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்களான கடலூர் பண்ரூட்டி மாளிகை மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கடலூர் லட்சுமி நாராயணபுரம் NGK நகரை சேர்ந்த பூங்காவனம் ஆகியோர் 28.08.2026 அன்றும், உர வியாபாரிகளான கணேசமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் முகமது பாசில் ஆகியோர் 29.08.2026 அன்றும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


பொள்ளாச்சி CSCID அலகு எண் 283/2026-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கணேசமூர்த்தி தொடர்ந்து மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டி வந்ததாக தெரியவந்தது.


பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் L. முரளிதரன் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் 14.09.2026 அன்று கணேசமூர்த்தியை கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் காவலில் இருந்த கணேசமூர்த்திக்கு தடுப்புக்காவல் ஆணை சார்பு செய்யப்பட்டது.


மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் விவசாயிகள் நல திட்டத்தை பாழ்படுத்தும் இத்தகைய சமூக விரோத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...