கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கிணர் பகுதியில் கரைக்கப்பட்டன. வறட்சி காரணமாக இயற்கை குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் மூழ்கடிக்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர்கள் நீரில் இறங்கி சிலைகளை பெற்று கரைத்தனர். நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான இன்று வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன.

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தன.



மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. வறட்சி காரணமாக அப்பகுதி குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் கரைக்கப்பட்டன.



குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீரில் இறங்கி விநாயகர் சிலைகளைப் பெற்று நீரில் மூழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...