கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் வீட்டுப் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்தி, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குடும்பத்துடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி, சில நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது இச்சம்பவம் தெரியவந்துள்ளது. பீரோ, மெத்தை, சோபா, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. புகார் அடிப்படையில் ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore: கோவை ராமநாதபுரத்தில் திருடச் சென்ற ஆசாமி ஒருவர், வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் வீட்டுப் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஐ.டி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
சில நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு முன்பக்க கதவு திறந்திருந்தது கண்டு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. உடனடியாக படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன.
மேலும் கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவை சேதப்படுத்தப்பட்டு இருந்தன. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாததால், ஆத்திரத்தில் அந்த நபர் பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு சுவரில் ஆங்கிலத்தில் சாரி என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.