கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறையாக தயாரிக்கப்படவில்லை எனக் கூறி பரவிய வீடியோ தொடர்பாக கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். உணவின் தரம் நன்றாக இருப்பதாகவும், உடற்பயிற்சி சாதனங்கள் இருந்த காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு விடுதி சமையலர் சுந்தர்ராஜுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் ஏற்பட்ட சம்பவம் என தகவல் வெளியானது.
Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் உணவு தொடர்பாக பரவிய வீடியோவை அதிகாரிகள் விசாரித்ததில், வீடியோவில் இருந்த தகவல்கள் தவறாக சித்தரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.
தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 48 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் மாணவர்களுக்கு சப்பாத்தி முறையாக தயாரித்து வழங்கப்படுவதில்லை எனக் கூறி, சமூக வலைதளங்களில் நேற்று வீடியோ ஒன்று பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் லட்சுமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் உணவு தொடர்பாக விசாரித்ததுடன், விடுதியிலும் நேரடியாக ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அதிகாரி லட்சுமி கூறுகையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தொண்டாமுத்தூர் அரசு மாணவர் விடுதியில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். விடுதியில் நேரில் ஆய்வு செய்தபோதும், மாணவர்களிடம் விசாரித்தபோதும் உணவின் தரம் நன்றாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், உணவு பரிமாறும் அறையில் உடற்பயிற்சி சாதனங்கள் இருப்பதாகவும், அந்த காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதி மற்றும் அரசின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு விடுதி சமையலர் சுந்தர்ராஜுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் லட்சுமி தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கல்விச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக வந்துள்ளனர். அவர்களில் சிலர் சமூக நல விடுதிக்கும் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, முன்னாள் மாணவர்களை விடுதிக்குள் அனுமதிக்க சமையலர் சுந்தர்ராஜ் மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விடுதி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.