கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செப்டம்பர் 18 அன்று கேரளாவில் இருந்து 3 பெண் யானைகளுடன் தமிழ்நாடு எல்லைக்குள் வந்த குட்டி யானைக்கு பின்புற காலில் காயம் இருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். 5 நாட்கள் பகல் தனிப்படை குழுவும், இரவு ட்ரோன் கேமராக்களும் மூலம் கண்காணிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 22 இரவு அசைவற்று கிடந்த குட்டி யானை செப்டம்பர் 23 காலை உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. உடற்கூறாய்வில் ஆழமான துளைக் காயங்கள் கண்டறியப்பட்டன.


Coimbatore: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில், கேரள மாநில வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வன எல்லைக்குள் 3 பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை என 4 யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்து, மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி சரகப் பகுதிக்குள் வந்தது.



அப்போது, அந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று பின்புற காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமத்துடன் நடந்து வந்ததை வனத்துறையினர் கவனித்தனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் குட்டி யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

செப்டம்பர் 18 முதல் 22 வரை பகல் நேரங்களில் வனத்துறை தனிப்படை குழுவினரும், இரவு நேரங்களில் அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் குட்டி யானையின் நிலைமை கண்காணிக்கப்பட்டது. குட்டி யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் அருகில் செல்ல முயன்றபோதெல்லாம், அதனுடன் இருந்த 3 பெண் யானைகளும் குட்டி யானையைச் சூழ்ந்து கொண்டு யாரையும் அருகில் அனுமதிக்கவில்லை.



இந்நிலையில், செப்டம்பர் 22 இரவு ட்ரோன் மூலம் கண்காணித்த போது, குட்டி யானை ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதும், அதன் அருகில் இருந்த மற்ற யானைகள் அங்கு இருந்து சென்று விட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, செப்டம்பர் 23 காலை மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, கோவை உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், வனக் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், கோவை வனக்கோட்ட வனக் கால்நடை மருத்துவர், எட்டிமடை உதவி கால்நடை மருத்துவர் மற்றும் WNCT, WWF-India, 'ஓசை' உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் குட்டி யானையின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின் போது, குட்டி யானையின் உடலின் பல்வேறு பகுதிகளில் மிக ஆழமான துளைக் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. காயங்களின் தன்மை மற்றும் ஆய்வின் அடிப்படையில், காட்டில் வாழும் ஏதேனும் ஒரு ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதாலேயே அந்த குட்டி யானை உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறை முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...