கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2026 அன்று வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகராட்சி மற்றும் Humane Animal Society (HAS) இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சுமார் 200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாநகராட்சி கால்நடை மருத்துவர் மரு.வருண்குமார் வெறிநோய், தடுப்பு முறைகள், நாய் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் 'வெறிநோய் இல்லாத கோவை 2030' இலக்கை அடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெறிநோய் (Rabies) தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (25.09.2026) நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் Humane Animal Society (HAS) இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. இதில் சுமார் 200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது மாணவர்களுக்கு வெறிநோய், அதன் தடுப்பு முறைகள் மற்றும் சமூக நாய்களை அணுகும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவர் வருண்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination - ARV) செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் வெறிநோய் பரவலைத் தடுப்பதில் தடுப்பூசியின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், நாய் கடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. குறிப்பாக, காயத்தை சோப்பு மற்றும் ஓடும் தண்ணீரால் நன்கு கழுவி, தாமதமின்றி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையின்படி, உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வெறிநோய் இருக்கக்கூடிய நாய்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றின் அசாதாரண நடத்தைகளை கவனிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நாய்களை அணுகவோ, கையாளவோ கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான இணக்கமான வாழ்வு, பொறுப்பான விலங்கு பராமரிப்பு மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் 2030-க்குள் வெறிநோய் இல்லாத கோவையை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர், நிகழ்ச்சியின் நிறைவாக, "வெறிநோய் இல்லாத கோவை 2030" என்ற இலக்கை அடைவதற்கான உறுதிமொழியை மாநகராட்சி கால்நடை மருத்துவர் அவர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் (பொ), கால்நடை மருத்துவர் (மிஷன் ரேபிஸ்) அபிராம், ஹியூமேன் அனிமல் சொசைட்டி (HAS) கல்வி அலுவலர் சரண், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...