ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

123-சட்டமன்ற உறுப்பினர்கள், 38 அமைச்சர்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 98 சதவிகித தொண்டர்களின் பலம் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு மேலே உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தரைமட்டத்தில் என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என ஓ.பி.எஸ். அணிக்கு சூசகமாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது. 

ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.

தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...