உக்கடம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை உக்கடம் குளத்தில் மூழ்கி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் குளத்தில், நேற்று (ஞாயிறு) மாலை கல்லூரி மாணவர் ஒருவர் குளத்தில் நடந்து சென்று மூழ்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மீனவர்கள் சிலர் அவரை தடுத்து குளக்கரையில் விட்டு உள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் சென்ற பின்னர் அந்த மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இன்று காலை உக்கடம் குளத்தில் சடலமாக உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த தனுஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்தவரை, மீனவர்கள் காப்பாற்றிய போதும், மீண்டும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த மாணவர் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளதாக அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...