ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை. 2 பேர் காவல் நிலையத்தில் சரண்

கோவை செல்வபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:  

கோவை சுங்கம் சிவராம் நகரைச் சேர்ந்த கோபாலின் மகன் வினோத்குமார் (36), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், செல்வபுரம் ஐயூடிபி காலனியை அடுத்த தேவேந்திர காலனியில்  உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்குமாரை வெட்டியுள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குண்டுராஜன் என்கிற ராஜன் (38), செல்வராஜ் (37) ஆகியோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். மேலும், கள்ளக்காதல் தொடர்பாகவே இந்தக் கொலை நடந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...