அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும்- பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்



கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாட்டிறைச்சி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படும் முறையற்ற வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முறைப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி கூடங்களுக்கோ, மாட்டிறைச்சி சாப்பிடவோ தடை இல்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாட்டை பாஜக மதச்சார்புடைய நாடாக காவிமயமாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். நாடு காவிமயம் ஆவதில் தவறில்லை, பாவிமயம் ஆவதே தவறு. எவ்வளவு தவறான கருத்துகளை முன்னிறுத்தினாலும், மத்திய அரசை அசைக்க முடியாது. திமுகவின் பிரித்தாளும் அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இருவருக்கும் இடம் காலியாக இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா உள்நோக்கம் கொண்டது. ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் நாட்டின் மக்கள் ஒட்டுமொத்தமாக பலன் பெறுவார்கள்.

ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜாமீனில் தான் வெளிவந்து இருக்கிறார். விடுதலை ஆகவில்லை. தினகரன் கட்சி பணியை தொடர்வது குறித்து அதிமுக-வினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல. தினகரனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் அதிமுக அமைச்சர்களிடம் சங்கடம் உள்ளது" என்றார்.

இதனைத்தொர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக, பாஜக-விற்கு ஆதரவு அளிக்கிறதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, ஏற்கவே பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறினார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...