நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் சுகாதார ஊழியர்கள் மனு

கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 304 ரூபாய் வழங்கப்படுவதில்லை. 

மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் சுகாதார ஊழிர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...