கூலிக்கு ஜவுளி பொருள் உற்பத்தி செய்வோரின் சேவை வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பு - சைமா பாராட்டு

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பை கொடுத்து வரும் ஜவுளித் தொழிலில் பெரும்பாலான உற்பத்தி கூலிக்கு சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, சாயப்பட்டறை போன்ற துறைகளினால் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கலால் வரி திட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலிக்கு சேவை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் குறைந்தபட்ச வரியான 5 சதவீத வரியை விதிப்பதன் மூலம் மேற்கண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள் மீதான வரியை கழித்து மீதி வரியை செலுத்த இயலும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று சரக்கு மற்றும் சேவை வரிக்குழு 16-வது கூட்டத்தில் ஜவுளி உற்பத்தி கூலியின் மீதான சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறித்து அறிவித்துள்ளது.

சைமா தலைவர் எம்.செந்தில்குமார் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தமது வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தி கூலி சேவை வரியை 5 சதவிகிதமான குறைத்தமைக்கு ஒட்டுமொத்த ஜவுளித்துறையின் சார்பாக தனது நன்றிகளை நிதியமைச்சருக்கும், ஜவுளித்துறை அமைச்சருக்கும், தென் மாநில முதலமைச்சருகும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் சைமா அனைத்து ஜவுளி உற்பத்தி கூலிக்கும் 5 சதவிகித வரியை விதிக்க கோரியிருந்தது. ஆயத்த ஆடை மற்றும் விரிப்பு துணிகள் இவற்றில் விடுபட்டு இருப்பது ஜவுளி உற்பத்தியிலேயே அதிக வேலை வாய்ப்பினை கொடுத்து வரும் இத்துறைகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்குழு கூட்டத்தில் ஆயத்த ஆடை, விரிப்பு மற்றும் இதர மதிப்பு கூட்டுப் பொருட்களை கூலிக்கு தயார் செய்யும் அனைத்து துறைகளையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைமா தலைவர் மேலும் கூறுகையில், செயற்கை பஞ்சு மற்றும் நூல் மீதான வரியை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூர்ந்து வரும் 18 ஆம் தேதி உரிய அறிவிப்பை விடுக்க நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியஸ்டர் மற்றும் இதர பஞ்சு மற்றும் நூலின் மூலம் தயாரிக்கப்படும் துணை பெரும்பாலும் பாமர மக்களால் பயன்படுத்தப்படுவதாலும், பல்வேறு அரசுகளின் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாலும், அரசு இத்துணிகளின் விலையை வரிவிதிப்பினால் உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, ஏற்கனவே விடுத்துள்ள இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலனை செய்து செயற்கை இழை மற்றும் நூலின் மீதான வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கும் என்று சைமா தலைவர் எம்.செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...