மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் பேட்டி

கோவை அரசு மருத்துவமனையில் விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே  கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...