சாலை வசதி கோரி குன்னூர் தேயிலை தோட்ட பணியாளர்கள் நூதனப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ட்ரூக் மற்றும் பக்கா சூரன் மலையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இதன் அருகாமையில் டான் டீக்கு சொந்தமான தேயிலை தோட்டமும் உள்ளது.

இந்த தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுயில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் அலுவலக பணிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று (ஜூன் 16) அப்பகுதி மக்கள் ட்ரூக் செல்லும் சாலையில் அமர்ந்து அங்கேயே சமையல் செய்து உண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த சாலையை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...