தனியார் பொறியியல் கல்லூரிக்கு கட்டிட நிலைப்புத்தன்மை குறித்து போலியான சான்றிதழை வழங்கியவர் மீது வழக்குப்பதிவு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்றிதழ் வாங்கித்தருவதாக சென்னையை சேர்ந்த சுந்தரம் என்பவர், கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் என்பவரிடம் கோரியுள்ளார். 

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...