கோவையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வு இன்று (மே 18) நடைபெற்றது. நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித மரியண்னை மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கல் மேலநிலைப்பள்ளி, புனித காணிக்கை அன்னை மேல்நிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையமான சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்த தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,



மத்திய  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 8748 நபர்களில் 3943 நபர்கள் தேர்வெழுதினர், 4805நபர்கள் தேர்வெழுதவில்லை. 



இத்தேர்வினை சிறப்பாக நடத்தவும், அவற்றினை கண்கானிக்கவும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கோவை மாவட்ட யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். யுபிஎஸ்சி தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்களும் அனைத்து மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை ஆட்சியர் நிலையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அவற்களும் சிறப்பான முறையில் பணியாற்றினர். 

இத்தேர்வினை சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...