சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை- கோவையில் முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிதி நிறுவனம் நடத்தி 3.65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு மேட்டூர் காவேரி பைனான்ஸ், அன்னை காவேரி பைனான்ஸ், ஸ்ரீ காவேரி பைனான்ஸ் என்ற  மூன்று நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. மேட்டூரை சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார், கனகராஜ் ஆகியோர் தங்களது உறவினர்களை இயக்குனர்களாக இணைத்துக்கொண்டு இந்த நிதிநிறுவனங்களை நடத்தி வந்தனர். 

இதனிடையே, கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிக வட்டி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டோரிடம் 3.65 கோடி ரூபாய் இந்த நிதி நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மணி என்பவர் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களின் மீதும், 24 இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 முதல் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே ரங்கசாமி என்ற இயக்குனர் உயிரிழத்தார். 

இந்நிலையில் திங்களன்று (ஜூன் 19) இந்த வழக்கில் முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு வழங்கினார். இதில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கும் தலா 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தார். மேலும், 23 இயக்குனர்களுக்கும், 3 நிதி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 44 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பினை வழங்கினார். மேலும், அபராதத் தொகையினை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கவும் தனது தீர்ப்பில் நீதிபதி பாபு உத்திரவிட்டார்.

இதனையடுத்து 23 நிதி நிறுவன இயக்குனர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 23 பேரில் பெரும்பாலான  இயக்குனர்கள் 60 வயதை கடந்த மூத்த குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீர்ப்பு, மோசடியில் ஈடுபடும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என அரசு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...