கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி அதிகாரிகள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பழைய அலுவலகத்திற்கு வெளியே வாடகைக்கு இருந்த அரசு அலுவலகங்கள் தற்போது புதிய கட்டிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. 

மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...