குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் எடுக்கும் முடிவிற்கு நானும் ஆதரவு - எம்.எல்.ஏ. கருணாஸ்

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்த முடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன் என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா  à®¨à®¿à®•ழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 

'எனக்கு அரசியல் அங்கீகாரம் அளித்தது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும்,  à®…திமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தான். குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என அதிமுக நிர்வாகிகள் எடுத்தமுடிவிற்கு தோழமை கட்சியான நானும் உடன்படுகிறேன். 

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் பெற்று பாஜக-விற்கு ஆதரவு அளிக்கப்பட்டதா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு அப்படி தான் மூத்த நிர்வாகி தம்பிதுரையும், துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்தனர்' என கருணாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து, à®’.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சனைகள் குறித்து பேச எனக்கு உரிமையில்லை. 

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தவறில்லை. அரசியல் வியாபாரம்  à®…ல்ல, மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் யாரும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு பிடித்தால் அவர்களை ஆதரிப்பார்கள். 

நீட் தேர்வு விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசு எந்த விதத்திகும் தமிழர்களின் சுயமரியாதையையும், உரிமைகளையும் விட்டுத்தராது. அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டுமென்பது மக்கள் விரோத கருத்து. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் திட்டங்களை அறிவித்தது போல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் 110 விதியின் கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நல்லாட்சி நடத்தி வருகிறார். 

4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தொடரும். எதிர்கட்சி என்பது ஆளுங்கட்சி மீது குறை கூறுவது இயற்கையானது தான். அதிமுக ஆட்சி குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள்' என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், முன்னாள் à®•வுன்சிலர்கள் ராஜ்குமார், சக்திவேல், திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...