அரசியலுக்கு வந்தால் ரஜினி புஸ்வானம் ஆகிவிடுவார்: சீரியஸாய் கலாய்க்கும் சீமான்

தமிழக அரசியல் கால் உடைந்த நாற்காலியாய் ஆடிக்கொண்டிருக்க, ஜெ.வின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப பலரும் கங்கணம் கட்டியுள்ளனர்.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் முன்பாக, 'நான் அரசியலுக்கு வருவேனா என்பதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்' என்று கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்த முறை ரசிகர்களோடு மீட்டிங், அரசியல் பேச்சு என சூட்டை கிளப்பிவிட்டார்.

இதை சில அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், பலர் மொழியை அடிப்படையாக கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆரம்பகட்டத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவே சாடிவந்தார். தொலைக்காட்சி பேட்டிகளிலும், செய்தியாளர் சந்திப்பின் போதும், 'தமிழகத்தில் வாழ்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை உண்டு' என்ற கருத்துக்களை பதிவு செய்தார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாட்டிற்கு காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தான் தேவை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தீபாவளிக்கு வெடிக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல புஸ்வானம் ஆகிவிடுவார்.

இத்தனை நாளாய் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், 'வச்சி செஞ்சு அனுப்புவோம்' என்று கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...