கோவையில் ஜே.கே.டயர்ஸ் சார்பில் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளில் சீறிப்பாய்ந்த வாகனங்கள்



கோவையில் ஜே.கே.டயர்ஸ் சார்பில் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

கோவை ஜே.கே.டயர்ஸ் சார்பில் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானத்தில் தேசிய அளவிலான கார் மற்றும் சுசுகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் நாட்டின் தலைசிறந்த ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காலை துவங்கி மாலை வரை 4 பிரிவுகளில் கார் பந்தையமும், 2 பிரிவுகளில் இருசக்கர வாகன போட்டிகளும்  à®¨à®Ÿà¯ˆà®ªà¯†à®±à¯à®±à®¤à¯.



எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தையத்தில் அவலான்ஜி ரேசிங் அணியை சேர்ந்த கோலாப்பூர் வீரர் சித்தேஷ் மண்டோடி முதலாவது இடத்தையும், மெக்கோ ரேசிங் அணியைச் சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் இரண்டாவது இடத்தையும், டார்க் டான் அணியைச் சேர்ந்த சென்னை வீரர் சந்தீப் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஜே.கே. ரெட்புல் ரூக்கி கோப்பை இருசக்கர வாகன போட்டியில் ஜேடென் முதலிடத்தையும், வருண் 2-வது இடத்தையும், லாகுரெய்சலா 3வது இடத்தையும் பிடித்தனர். 3-வதாக நடைபெற்ற யூரோ ஜே.கே 17ன் 8வது போட்டியில் யூரோ இண்டர்நேசனல் அணியை சேர்ந்த தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடத்தையும், கர்னாடகாவை சேர்ந்த ஆகாஷ் கவுடா 2வது இடத்தையும், தமிழக வீரர் விகாஷ் ஆனந்த் 3வது இடத்தையும் பிடித்தனர்.

4-வது போட்டியான யூரோ கப் 9 வது சுற்று போட்டியில் முதலிடத்தை சித்தேஷ் மண்டோடி முதலிடத்தையும், விஷ்ணு பிரசாத் 2-வது இடத்தையும், சரண் விக்ரம் 3 வது இடத்தையும் பிடித்து அசத்தினர். ஜே.கே.டயர் சுசிகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டி கோப்பைக்கான 10 சுற்றுகளின் முடிவில் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும், மால்சவ் டான்கிலியானா 2வது இடத்தையும், லால் மவிபுவா 3வது இடத்தையும் பிடித்து அசத்தினர்.



இறுதியாக நடைபெற்ற யூரோ ஜே.கே 17ன் 11 வது போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடத்தையும், ஐதராபாத் வீரர் ஆனிந்தித் ரெட்டி 2வது இடத்தையும், மகாராஷ்டிர வீரர் நயன் சாட்டர்ஜி 3வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியின் தனிச்சிறப்பாக முதல் முறையாக மீரா எர்டா என்ற பெண் வீராங்கனையும் சக வீரர்களுடன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆண் வீரர்களுடன் கலந்து கொண்டது வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை. வெற்றியை இலக்காக வைத்து தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி போட்டியில் பங்கேற்றேன்' என தெரிவித்தார்.

(பைட்) மிரா எர்டா - வீராங்கனை கலந்து கொண்ட 4 போட்டிகளில் 2 போட்டிகளில் முதலிடத்தையும், 2 போட்டிகளில் 2வது இடத்தையும் பிடித்து அசத்திய சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் கூறும் போது பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தில் போட்டிகளில் பங்கேற்றதாகவும் சர்வதேச அளவிலான வீரர்களுடன் போட்டியிட்ட அனுபவம் தொடர் வெற்றிகளை குவிக்க உதவியதாகவும் தெரிவித்தார்.

(பைட்) விஷ்ணுபிரசாத் - வீரர் போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதே சமயம் அதிவேகத்தில் கார்களும் இருசக்கர வாகனங்களும் பந்தய சாலையில் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அடுத்த இரண்டு சுற்று போட்டிகள் கோவையில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையும், 3-வது சுற்று செப்டம்பரில் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையும் இறுதி சுற்று நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேஷனல் பந்தய தளத்தில் நடைபெறுகின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...