கோவையில் திரையரங்கம் மீது கல்வீச்சு: இருவர் கைது

கோவை காந்திபுரத்தை அடுத்த ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கம் செயல்பட்டுவருகிறது.

நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர். 

இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...