மாத ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணுவாய் அருகே உள்ள சோமையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதாமாதம் முறையாக சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பணப்பலன்களை தராமல் நிர்வாகம் இழுத்தடிப்பதோடு, சங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியே மாத ஊதியத்தை பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உட்பட அரசு துறைகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சம்பளத்தை பெற்றுத்தரக்கோரி மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...