ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர்.அப்துல்கலாம் நினைவு நூலகம் துவக்கம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் டாக்டர்.அப்துல்கலாம் நினைவு நூலகம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால் இன்று (18.07.2017) மாணவ, மாணவியர்களைக் கொண்டு தொடங்கி வைக்கப்பட்டது.



இதில், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட டாக்டர்.அப்துல்கலாம் நினைவு நூலகத்தில் 8000-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. 



மாநகராட்சி ஆணையர் நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடம் ஆற்றிய உரை, “மாணவ பருவத்தில் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்துடன் சேர்த்து நூலகத்திற்கு சென்று பிற புத்தகங்களை படிக்கும் பழக்கம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. தமிழ் மற்றும் ஆங்கிலம் நூலை படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளுக்கு அகராதியை பயன்படுத்தி அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும்.

வாசிப்பு பழக்கம் உங்களை பெரிதும் முன்னேற்றும். நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு நூலகம் பெரிதும் உதவியாக இருக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளிகளை மேம்படுத்த உள்ளோம். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கப்படும். ஆகவே, மாணவ செல்வங்களாகிய நீங்கள் நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி பயனுற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு  மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 



இந்நிகழ்வின் போது மாநகராட்சி கல்வி அலுவலர் உமா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப்பு வர்த்தக அலுவலர் ஸ்வாதி ரோகித், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குநர் ஐசக் கிறிஸ்டின் மோசஸ், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பரணிதரன், அபர்னா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...