பொது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மென் பொறியாளர் சைக்கிள் பயணத்தை இன்று துவக்கினார்.

கோவையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தண்டபாணி. சைக்கிள் பிரியரான இவர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் மேற்கொண்டார். 



தூய்மை நகர விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று காலை 3 மனிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கி உள்ளார்.இரவு 9 மணிக்கு பெரம்பலூர் வந்தடையும் அவர் மறு நாள் காலை 3மனிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வருபவர் இரவு 10.00 மணிக்கு கரூர் வருகிறார். மறு நாள் காலை காங்கயம் வழியாக 8.மனிக்கு கோவை பந்தய சாலையில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.   



ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கிளை சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இது குறித்து ரோட்டரி அமைப்பின் ஒருங்கினைபாளர் கூறும்போது மக்களிடையே தூய்மை நகர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ரோட்டரி சங்கம் சார்பில் நலிவடைந்து உள்ள ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உதவிட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் பங்களிப்புடன் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...