ஆடி அமாவாசையினை முன்னிட்டு முன்னோர்களை வழிபட நொய்யல் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை, பேரூர் நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். 



கோவை மாவட்டம், பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் இன்று ஈடுபட்டனர். ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட இன்று பேரூர் கோவிலில் கூட்டம் அதிகளவிலேயே காணப்பட்டது. இதில், இறந்துபோன தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து எள், அரசி, சர்க்கரை, பழம் ஆகியன படையலிட்டு பூஜை செய்தனர். 



இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதலே திரளான பக்தர்கள் கோவை மாவட்டம், பேரில் உள்ள நொய்யல் படித்துறையில் திரண்டு இறந்துபோன முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டு வருகின்றனர்.



தொடர்ந்து, திதி முடித்துவிட்டு செல்லும்போது ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்கன்றுகளுக்கு அகத்திக்கீரைகளை வழங்கிச் சென்றனர். இதனால் நொய்யல் படித்துறையில் பக்கதர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...