காவல்துறையினரின் வஞ்சிப்பில் இருந்து பாதுகாக்கக் கோரி சாலையோரம் வசிப்போர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர். 

கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ள இம்மக்கள் தங்களுக்கென ஒரு வீடு அல்லது இடம் வேண்டும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் குறைதீர் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 23) இம்மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இவர்களின் உடமைகளை அப்புறப்படுத்தி உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுமாறு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனைத்தொடர்ந்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காந்திபார்க் ஃப்ளாட் பாரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடலை சாட்டையால் அடித்தும், கத்தியால் கைகளை காயம் செய்தும் தங்களது வலிகள் நிறைந்த கோரிக்கையினை ஆட்சியர் அலுவலகத்தில் வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தங்களது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...