வீட்டுமனைப் பட்டா வழங்காததால் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு


விட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தனது 4 சென்ட் அளவிலான விட்டுமனைக்கு பட்டா கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து வந்துள்ளார். கடந்த 2017 செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பட்நாயக் இருந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது சரவணக்குமார் தன் உடலின் மீது மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்குப் பின் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.



இந்நிலையில், தற்போது வரை வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்படாததைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தாய் அங்காத்தால், மனைவி அன்னபூரணி மற்றும் குழந்தைகளுடன் வந்த சரவணக்குமார் தங்களது உடலின் மீது மண்ணெண்னையினை ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்தனர். 

இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டனர். தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...