கழுத்து அறுபட்ட நிலையில் பெண் பிணம்- போலீசார் தீவிர விசாரணை



உதகை பகுதியை சேர்ந்த ரேவதி (45) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுக்கரை அருகே, அரிசிபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தோட்டம் பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ரேவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முதற்கட்டமாக ரேவதியின் மகன் என்று கூறி சந்தோஷ் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் ரேவதியின் தலையில் கணமான பொருள் கொண்டு தாக்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிந்துள்ள கைரேகைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேவதியின் கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...