அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கையையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தின் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆனைகட்டி மற்றும் சில தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் - 2017 இரண்டாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான கடைசி தேதி 10.08.2017 ஆகும். 

எனவே தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 10.08.2017 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெற தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...