நீலகிரி மாவட்டதில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியத்திற்குட்பட்ட கூக்கல், எப்பநாடு மற்றும் கடநாடு ஊராட்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சுமார் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.



நீலகிரி மாவட்டம், உதகை, கடநாடு ஊராட்சிக்குட்பட்ட சொக்கநல்லி பகுதியில் 2016-2017 பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.10 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.6.30 மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும், கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட சிறியூர் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.10 வீதம் 7 பயனாளிகளுக்கு ரூ.14.70 மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் ஆக மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை பார்வையிட்டார்.



மேலும், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும், உணவுப்பொருட்களின் இருப்பினையும், மாணவ, மாணவியர்கள் தங்கும் இடத்தினையும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவினையும் ஆய்வு செய்தார். 

ஆனைகட்டி பகுதியில் உள்ள பகுதி நேர நியாய விலைகடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பினையும், அதே பகுதியில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக அகழி ஆழப்படுத்துதல் பணியினையும், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துதல் பணியினையும், சிறியூர் பகுதியில் குடிநீர் ஆதாரம் மேம்படுத்துதல் பணியினையும், அகழி ஆழப்படுத்துதல் மற்றும் நடைபாதை பராமரித்தல் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து “பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு” துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சையினை தரமாக வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கடனாடு சின்னகுன்னூரில் பிளாஸ்டிக் அறவை இயந்திரம் மற்றும் மக்கும், மக்காத குப்பை கிடங்கினையும், நாற்றுச் செடிகள் உற்பத்தி செய்யும் இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரமேஷ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...