உக்கடம் பெரியகுளத்திற்கு வரும் தண்ணீரில் சீர்கேடு; வாய்க்காலில் நடப்பது என்ன?

கோவை, உக்கடம் பெரியகுளத்திற்கு பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் பயணித்து நெய்யல் நீர் உக்கடம் பெரியகுளத்தை வந்து சேர வேண்டும். வாய்க்கால் கரையில் உள்ள மண் தடத்தை காரணம் காட்டி தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டுமானத்தை நடத்தி வருகிறது. இதற்கு உடந்தையாக அரசின் அனைத்து துறைகளும்செயல்பட்டு வாய்க்கால் சுருங்கவும் நீர் வரும் பாதை தடைபடவும் காரணமாக உள்ளன.



குறிப்பாக, பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் வரையில் வாய்கால் ஓரம் நிலங்கள் ஆக்கிரமிப்பு செயல்பட்டு பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டிடக் கழிவுகளை இங்கு கொட்டி வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் பொருட்களாலும், உபரி காங்ரீட்டு கலவைகளாலும் வாய்கால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இதனை மீறி வரும் இந்த கழிவுநீர் உக்கடம் பெரிய குளத்தில் கலக்கிறது. மேலும், சாலை விரிவாக்கத்திற்காக வாய்க்கால் துர் வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



முதலில் 2015-2016 நிதி ஆண்டில் பொதுப்பணி துறை திட்டத்தில் வாய்க்கால் மேலே 9 இலட்சம் மதிப்பில் சாலை அமைத்தது. இந்த ஆண்டு பொதுப்பணித் துறை நொய்யல் ஆறு குளங்கள் சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையே 23 லட்சம் தான் 2016-2017 நிதி ஆண்டில் மாநகராட்சி அதே சாலையை விரிவாக்கம் செய்து வாய்க்கால் துர்வார முடியாத அளவுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை பொதுப்பணி துறைகள் ஒரு சாலையை போட வேண்டிய தேவை ஏற்பட்ட காரணம் என்ன? வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் புதர் மூடி உள்ளது. இதனை தூர்வார முடியாத அளவுக்கு தடுப்புவேலி அமைந்துள்ளது. கட்டுமான நிறுவனத்தின் உபரி காங்ரீட்டு கலவையை வாய்க்கால் நடுவே கொட்டி உள்ளனர். கடும் வறட்சி மற்றும் நீர் தட்டுப்பாட்டால் மக்கள் தன்னார்வ அமைப்புகள் குளம் குட்டைகளை தூர் வாரி வரும் நிலையில் அரசு துறையே இது போன்ற அநியாயத்துக்கு துணை போவது மிகவும் கண்டனத்துக்குறியது.உடனடியாக வாய்க்கால் கரையில் உள்ள தடுப்புகளை அகற்றி உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...