ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 'மாஸ்க்' அணிந்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலியை முன்னிட்டு கோவை மாவட்ட வனத்துறை, பாரதியார் பல்கலைக் கழகம் BSMED நேச்சர் கிளப், கலாம் மக்கள் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்தும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா இன்று காலை 10.30 மணிக்கு கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம், பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கியது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க சுமார் ஐந்தாயிரம் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் அவர்களின் 'மாஸ்க்' அணிந்து கொண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவங்கினர். இப்பேரணி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பாலசுந்தரம் ரோட்டில் இருந்து துவங்கி வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அலுவலர் ராஜ்குமார், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மற்றும் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பாரதியார் பல்கலைக்கழக இயக்குனர் விவேகானந்தன், ரோட்டரி கிளப் ஆப் டவுன் ட்டவுன் துணை ஆளுநர் காட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செந்தில் குமார் ஒருங்கிணைத்தார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...