குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி சிறு சிறு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தன்னை சிலர் காலி செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை போத்தனூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மூன்று மகள் மற்றும் ஒரு மகனுடன் அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் புற்று கோவில் உள்ளதால் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி சிலர் ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.



எனவே வீட்டை காலி செய்யுமாறு அவர்கள் கூறவே போத்தனூர் காவல்நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர் தனது நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.



இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு பந்தையசாலை காவல்நிலையம் அழைத்து சென்றனர். மிரட்டல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தனக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...