கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


கோவை மாநகராட்சியில் பருவ மழை காலத்தினையொட்டி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பருவ மழை பெய்ய உள்ள சூழ்நிலையில், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துவதற்காக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகவளாகங்கள், தொழிற்கூடங்கள், பூங்காக்கள், ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து குப்பைகளை சேராவண்ணம், அவ்வப்போது புனரமைப்பு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்யும் போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்கள் தெரிய வரும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...