கோவை ரயில் நிலைய முகப்பில் உதகை ரயில்: வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை

கோவை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக ரயில் நிலையத்தின் முன்பு இருந்த பழைய முகப்பு அகற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பழமையான உதகை ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



1880-களில் உதகைக்கு மலைப்பாதை வழியே பயணித்த இந்த ரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சின் வைக்கப்பட்டுள்ளதோடு, கோவை ரயில் நிலையத்தின் முன்புறம் 10 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அங்கு இருக்கும் ஆட்டோ நிறுத்தும் இடத்தை காலி செய்யுமாறு ஆட்டோ ஓட்டுனர்களை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.



ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவால் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகவும், ரயில் நிலையத்திற்குள் வாடகை கார்களுக்கு நிறுத்த இடம் கொடுத்திருப்பது போல் ஆட்டோக்களை நிறுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது கோவை ரயில் நிலையத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் எஞ்சினின் முன்புறம் ஆட்டோக்களை நிறுத்திய ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...